திருச்சியில் மரங்களை வெட்டி அட்டூழியம் - கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை!
திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழ சாலையில் இருந்து அம்மா மண்டபம் போகிற வழியில் உள்ள தங்கம் பல அடுக்குமாடி குடியிருப்பு எதிரில் இன்று காலை நெடுஞ்சாலையில் உள்ள மரங்களை கீழ் பகுதியை மட்டும் வைத்துவிட்டு மேல் பகுதி முழுவதுமாக வெட்டப்பட்டு விட்டது. இதனைக் கண்ட சமூக ஆர்வலர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் மாநகராட்சி அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். ஆனால் அது நெடுஞ்சாலைத்துறையில் வருவதால் நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்பார்ட்மெண்ட் அருகில் இரவு நேரங்களில் பூச்சிகள் வருவதால் வெட்டப்பட்டதாக தெரிவித்துவிட்டு மரம் முழுவதையும் காலி செய்து உள்ளனர் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்கள் உதவியுடன். கிளையை மட்டும் கழித்து விடுகிறோம் என கூறிவிட்டு மரத்தையே காலி செய்து உள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை உள்ள மரத்தை வெட்டியவர்கள் மீது திருச்சி மாநகராட்சியும், பொதுபணித்துறை நிர்வாகவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மரங்கள் வெட்டப்படுவது தொடர்பான புகார்களை தெரிவிக்க முதல்கட்டமாக மாவட்டத்தில் ஆன்லைன் புகார் தெரிவிக்கும் வசதியை ஏற்படுத்துவது வேண்டும் எனவும் கோரிக்கைகளை வைக்கின்றனர் இயற்கை சமூக ஆர்வலர்கள்.