திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையப் பகுதியில் நேற்று (24.08.2025)முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சி பயணம் மேற்கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கானோர் காத்திருந்தனர்,
அப்பொழுது அவ்வழியாக கூட்டத்தில் கலந்து கொண்டவர் மயக்கம் அடைந்ததாக கூறிய நோயாளியை ஏற்றுவதற்கா
108 ஆம்புலன்ஸ் வந்துள்ளது,
அப்பொழுது 108 ஆம்புலன்சை வழிமறித்து நகர செயலாளர் அமைதி பாலு உள்ளிட்டோர் தலைமையிலான கும்பல் தாக்கி கண்ணாடிகள் மற்றும் வாகனத்தை சேதப்படுத்தியுள்ளனர்.
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செந்தில், மருத்துவ உதவியாளர் ஹேமாலதா (8மாத கர்ப்பிணி) ஆகியோர்களை துறையூர் நகர்மன்ற கவுன்சிலரும், அதிமுக நகரச் செயலாளருமான அமைதி பாலு என்கின்ற பால முருகவேல், நகர்மன்ற கவுன்சிலர் தீனதயாளன், எம்ஜிஆர் இளைஞர் அணி நகர செயலாளர் விவேக் உட்பட 14க்கும் மேற்பட்டவர்கள் மீது பெண்களிடம் கண்ணிய குறைவாக நடந்து கொண்டது.அரசு சொத்தை சேதப்படுத்தியது, வாகனத்தை வழி மறித்தது அரசு பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட ஆறு பிரிவிகளில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
Comments