திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த கரூர் எம்பி ஜோதிமணி பேசும்போது. தமிழக வெற்றிக்கழக கரூர் கூட்டத்தில் நடந்த மிகப்பெரிய துயர சம்பவத்தில் 41 பேர் இறந்து போய் உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக நான் மரணமடைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்தினரை பார்த்து வருகிறேன். பல பேர் எளிய குடும்பப் பின்னணியை கொண்டவர்கள்.அவர்கள் தங்கள் முக்கிய குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பலர் தின கூலிகளாக இருக்கின்றனர். அனைவரும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதே மிகுந்த மனச்சுமையை ஏற்படுத்துகிறது. இது போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.
இறந்தவர்கள் யாரும் கொரோனாவினால் இறக்கவில்லை கூட்டத்திற்கு சென்றதனால் இறந்துள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அதற்கான சரியான விசாரணை நடக்க வேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடு. உயர் நீதிமன்றம் அமைத்த எஸ் ஐ டி விசாரணையிலும் எனக்கு மாற்று கருத்து கிடையாது. அஸ்ரா கர்க் மிக முக்கியமான நேர்மையான ஆளுமை மிக்க அதிகாரி. உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு சென்ற பின் உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு முன்னாள் நீதியரசர் சஞ்சய்ரஸ்தோக்கி அவர்களுடைய தலைமையில் குழுவையும் அமைத்துள்ளனர். பொதுவாகவே சிபிஐ ட்ராக் ரெகார்ட் பாஜக ஆட்சிக்கு வந்த பின் சிபிஐ ஆக இருந்தாலும், அமலாக்க துறையாக இருந்தாலும், வருமானவரி துறையாக இருந்தாலும் வெறும் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே அதை பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் விசாரித்து ஒரு நியாயம் கூட இதுவரை கிடைக்கவில்லை. அது போன்ற சூழல் உள்ளது. சிபிஐ விசாரணை மட்டும் வைத்தால் மக்களுக்கு நம்பிக்கை இருக்காது என்பதால் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஒரு குழு அமைத்துள்ளனர். அந்தக் குழுவில் 2 தமிழகத்தைச் சேர்ந்த ஐஜி பதவி அளவிலான ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தை பூர்வீகமாக கொள்ளாதவர்களை சேர்க்கலாம் என கூறியுள்ளனர். அந்த குழுவில் ஒருவராக அஸ்ராகார்க் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். அவர்கள் கூறும் அனைத்து நடைமுறையும் அஸ்ராகார்க்கிற்கு பொருந்தியுள்ளது.
அந்தக் குழுவில் அஸ்ராகார்க்கை சேர்த்தால் அந்த விசாரணை நேர்மையாக சரியான பாதையில் செல்கிறது என்ற புரிதலை நமக்கு அளிக்கும் என நான் நம்புகிறேன்.
கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும் பொழுது அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நான் நினைப்பேன். உச்சநீதிமன்ற தீர்ப்பில் எனக்கு ஒரு சின்ன நெருடல் உள்ளது. குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இந்த விசாரணையை முடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என அந்த தீர்ப்பில் எங்கும் இல்லை.
மாதம் ஒருமுறை சிபிஐ விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உள்ளது. அப்படியெனில் இந்த விசாரணை ஒரு வருடம் ஆகுமா, இரண்டு வருடம் ஆகுமா அல்லது நான்கு வருடம் ஆகுமா என யாருக்கும் தெரியாது. இந்த வழக்கு முடிவடையாத ஒரு சூழல் உள்ளதால் தமிழக அரசு இந்த விசாரணைக்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைக்க வேண்டும். இந்த வழக்கு இன்னும் முடியவில்லை இது ஒரு இடைக்கால உத்தரவு தான்.
பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை அவர்கள் தமிழக வெற்றி கழகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இந்த சிபிஐ விசாரணையை பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது.
பாஜகவின் டிராக் ரெக்கார்டு அதுதான். பாஜகவின் கீழ் சிபிஐ சுதந்திரமாக செயல்பட முடியும் என நாம் நினைக்க முடியாது. தமிழக வெற்றி கழகமும் சிபிஐ விசாரணை கேட்கவில்லை.
இது போன்ற சூழலில் பாசிச சக்தியை எவ்வளவு தூரம் வலிமையாக தமிழக வெற்றி கழகம் எதிர்க்கிறது என்பதற்கான அரசியல் ரீதியான சவாலாக இது அவர்களுக்கு இருக்கும் என நினைக்கிறேன்.
இவை அனைத்தையும் கடந்து எங்க மக்களுக்கும், எங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம் என்றார்
தமிழகத்தில் சிபிஐ வைத்து அரசியல் செய்யப்படுகிறது என அண்ணாமலை கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு. சிபிஐயை வைத்து யாரும் அரசியல் செய்யவில்லை, சிபிஐயை வைத்து பாஜக தான் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அரசியல் செய்கிறது.
பாஜகவால் பிரதமர் நரேந்திரமோடி அவர்களால் மிகப்பெரிய ஊழல்வாதிகள் என்று பட்டியலிடப்பட்டவர்கள் எல்லாம் இதே சிபிஐ இதே அமலாக்கத்துறை இதே வருமான வரித்துறை சோதனைக்கு பின்பு, விசாரணைக்கு பின்பு பாஜக வாஷிங்மெஷினால் வெளுக்கப்பட்டு புனிதமானவர்களாக ஆகியுள்ளனர்.
இதுவரை சிபிஐ, இ.டி, வருமான வரித்துறையோ பாஜக ஆளுகின்ற மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள யாரையாவது விசாரித்து பதிவு செய்துள்ளார்களா என பாருங்கள்.
இதுவரை நாம் யாரும் அரசியல் நோக்கத்தோடு கூறவில்லை பாஜகவினுடைய 11 ஆண்டுகால ஆட்சியில் இது போன்ற விசாரணை அமைப்புகளை அரசியல் ரீதியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். மக்களுக்காகவோ மாநில நலன்களுக்காகவோ அவர்கள் பயன்படுத்தியதே இல்லை. சிபிஐ , இடி, வருமான வரித்துறை இவை அனைத்தும் பாஜகவின் டீம் என்றார் அதனால் எங்களுக்கு அதன் மீது ஓர் அச்சம் உள்ளது. அதே நீதிமன்றம் சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஒரு குழு அமைத்துள்ளது அதில் தமிழகத்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் இருப்பார்கள் எனக் கூறுவது நம்பிக்கை அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த விசாரணையை முடித்து எங்களுக்கும் மக்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். அந்த உத்தரவு உச்சநீதிமன்ற உத்தரவவில் இல்லை அது எனக்கு முரணாக தெரிகிறது என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments