திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் பட்டப்பகலில் ஏகேகேவி பள்ளியில் படிக்கும் மாணவர் பள்ளி முடித்து சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கரூர் பைபாஸ் ரோட்டில் பாலத்தின் மீது ஏறிக்கொண்டு இருந்த பொழுது திடீரென ஒரு மாணவர் இவரை விரட்டி வந்து அருவாளால் வெட்ட முற்பட்டு உள்ளார்.
சைக்கிளை கீழே போட்டுவிட்டு அந்த மாணவர் தப்பி ஓடி உள்ளார். இரண்டு மாணவர்களும் கீழ சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர்கள் முன்விரோதம் இருந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அருவாளால் துரத்தி வெட்ட வந்த அவர் ஏற்கனவே இந்த பள்ளியில் பயின்று படிப்பை பாதியில் நிறுத்தியவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு மாணவர் சைக்கிளில் போகும்பொழுது ஏற்கனவே பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர் அரிவாளால் சாலையில்
இன்னொரு மாணவரை வெட்ட முற்பட்ட சம்பவத்தை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. போலீசார் இரண்டு மாணவர்களையும் தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments