திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பேருந்து நிலையத்தை சுற்றிலும் வணிக வளாகங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள ஒரு சில வணிக வளாகங்கள் செயல்படாமல் ஆண்டு கணக்கில் பூட்டி வைத்து கட்டிடங்கள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. இவற்றில் சமூகவிரோதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது. இது மட்டுமில்லாமல் ஆண்டு கணக்கில் செயல்படாமல் கிடக்கும் வணிக கட்டிடங்களில் நீர் தேங்கி சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது.

இதில் குப்பைகள் கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது. இதனால் கழிவு நீரில் கொசு உற்பத்தியாகும் சூழல் உருவாகியுள்ளது. மத்திய பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. திருச்சி மாநகரின் மையப் பகுதியில் உள்ள இந்த மத்திய பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள செயல்படாமல் இருக்கும் கட்டிடங்களை ஆய்வு செய்து

சமூக விரோத நடவடிக்கைகளை தடுக்கவும், நோய் தொற்று ஏற்படாத வண்ணம் அவற்றை சுத்தம் செய்வோம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments