திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏலூர்பட்டியில் இருந்து எருமைப்பட்டி செல்லும் சாலையின் நுழைவுவாயில் அருகே ஒரு கோழி இறைச்சி கடை உள்ளது. இந்த இறைச்சிக் கடை அருகில் உள்ளவர்கள் இறைச்சிக்கடை உரிமையாளர் கொண்டு வந்த பதப்படுத்தப்பட்ட கோழிக்கறியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தொட்டியம் மண்டல துணை தாசில்தார் கவிதா ஏலூர்பட்டி வருவாய் அலுவலர் சந்திரசேகரன் ஏலூர்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி, தொட்டியம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், கிராம உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட கோழி இறைச்சி கடைக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது உணவு பாதுகாப்பு துறையில் உரிய அனுமதி இல்லாமல் இறைச்சிக்கடை இயங்கி வந்தது தெரியவந்தது.

மேலும் அங்கிருந்த பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சோதனை செய்து அதன் தயாரிப்பு தேதி முடிவு தேதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் உரிய அரசு அனுமதி பெறாமல் இறைச்சி கடை செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் அந்த கோழி இறைச்சி கடைக்கு சீல் வைத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO







Comments