திருச்சியில் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா

திருச்சியில் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா

திருச்சி இலக்கிய வாசல் சார்பில் ப்ளாசம் ஹோட்டல், செண்பகம் அரங்கத்தில்  கலை இலக்கியத் துறையினர் & சமூக சேவை புரிபவர்கருக்குப் பொற்கிழி மற்றும் விருது வழங்கும் விழாவில்  இலக்கிய வாசல் தலைவர் கப்பல் கவிஞர் கி.கிருஷ்ணமூர்த்தி தொடக்கவுரையாற்றினார்.      

தாய்க் கோயில் நிறுவனர் அரிமா சித.சுரேசுகுமார் தலைமையில்,கார்முகில் புத்தக நிலையம்  ஒ.கார்முகில், கலையரசு ஆதி.ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

வந்தவர்களை முன்னவர் வ.நாராயண நம்பி வரவேற்றார்.

இதையடுத்து  உரத்த சிந்தனை  செயலாளர் கவிஞர் தஞ்சை தாமு, வேர்கள் அறக்கட்டளை நிறுவனர் சூ. அலெக்ஸ் ராஜா,   விஜிபி நிறுவன துணைத் தலைவர் ரா.தங்கையா  ஆகியோர்    தமிழ் மன்ற முதன்மைத் தலைவர் வீ.கோவிந்தசாமிக்கு தமிழ்ப் பணிக்கான விருதும், தண்ணீர் அமைப்புக்கு செயல் தலைவர் கே.சி நீலமேகத்திற்கு சமூக சேவைக்கும் , நாடக இயக்குநர் ரா செ.ஸ்ரீதருக்கு நாடகத் துறையில் நீண்ட கால சேவைக்கும் விருதுகள், பொற்கிழி வழங்கி பாராட்டினர்கள் .


 கவிஞர் இராசு. நாச்சிமுத்துக்கு  செந்தமிழ்க் கவிவாணர் விருதும் , பேராசிரியர் பீட்டர் நடேசனுக்கு மெல்லிசைத் தென்றல் , முனைவர் இரா .பூங்கோதைக்கு கல்விச் செம்மல் விருதும், சூர்ஜெஸ்டின் ஸ்னோடெனுக்கு நாடகச் சுடர் விருது , ஒசைக் கணக்குமு த. கிருஷ்ண லீலா மணிக்கு பைந்தமிழ்ப் பாட்டரசி விருதும்,       கவிஞர் பா. சேதுமாதவனுக்கு கவிச் செம்மல் விருதும்,     பன்முகக் கலைஞர் லால்குடி த.முருகானந்தனுக்கு,   கவிஞர் சங்கம்பட்டி சரசுக்கு நற்பணிச் செம்மல் விருது வழங்கப்பட்டது.

 தாய்க் கோவில் நிறுவனர் சித.சுரேஷ்குமார் பேசுகையில் படைப்பாளிகள், கலை, இலக்கியத்தில் சிறந்து விளங்குவோரை அங்கீகரித்து ஊக்கப்படுத்த வேண்டும். படைப்பாளிகளே சமூக இயக்கத்தின் உயிர்ப்பு .  கலை, இயக்கியம், சமூகத்திற்காக தொண்டாற்றும் இளம் சாதனையாளர்களை அடையாளப்படுத்துவது அவசியம் என்றார்.


 விருது பெற்றவர்களை தண்ணீர் அமைப்பு செயலாளரும், கலைக்காவிரி உதவிப் பேராசியருமான தி.சதீஸ்குமார்,      திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற தலைவர் வே.சந்தானகிருஷ்ணன்,    தண்ணீர் அமைப்பு நிர்வாகி கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் ,   திருவரங்கம் இராசவேலர்த் தமிழரங்கு பொறுப்பாளர் இராச .இளங்கோவன், முனைவர் ஜெ.ரஞ்சனி பாராட்டி பேசினார்கள்.  

முடிவில் மலைக்கோட்டை நண்பர்கள் நற்பணி இயக்க தலைவர் உறந்தை மு. பிச்சையா நன்றி கூறினார்.


திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM