ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9ஆம் தேதி உலக அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது.
உலக தபால் ஒன்றியம் (Universal Postal Union) என்பது 1874ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் தபால் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது.1969ஆம் ஆண்டு உலக தபால் ஒன்றியத்தின் மாநாடு டோக்கியாவில் நடைபெற்ற போது, அதில் உலக தபால் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தை நினைவுக்கூறும் விதமாக ஆண்டுதோறும் உலக அஞ்சல் தினத்தை அக்டோபர் 9ஆம் தேதி கொண்டாட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இத்தினம் உலகெங்கிலும் உள்ள அஞ்சல் சேவைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும், அஞ்சல் துறையின் பங்களிப்பைப் போற்றுவதற்காகவும் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று ரோட்டரி கிளப் திருச்சி டைமன்ட் சிட்டி எலைட் சார்பில் தென்னூர் சுப்பையா நடுநிலைப் lபள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளிக்கு வருகை தந்த அஞ்சலக ஊழியர் அவர்களுக்கு மலர் கொத்து வழங்கி சால்வை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. அஞ்சலக ஊழியர் அவர்கள் தாம் பட்டுவாடா செய்யும் கடிதங்கள் குறித்தும் அதில் போடப்படும் சீல்கள், அனுப்புனர், பெறுநர் முகவரி, தபால் வகைகள் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். மாணவர்கள் தங்களுக்கு பிடித்த நண்பர்களுக்கு அஞ்சல் அட்டையிலும் கடிதத்திலும் தபால்கள் எழுதினர்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் தலைமையில் நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியை சகாயராணி ஒருங்கிணைத்து நடத்தினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments