Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் உலக மன நாள் (World Mental Health Day) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆண்டு தோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநல கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக இந்நாள் அமைகிறது. முதன்முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் இது கொண்டாடப்பட்டது இவற்றில் 150-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கிறது. அதை முன்னிட்டு தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியின் இன்டராக்ட் கிளப் சார்பில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கலை மருத்துவமனையின் மருத்துவர் யோகேஷ் அவர்கள் மாணவர்களிடம் பேசுவையில் உடம்பு சரியில்லை என்றால், டாக்டரிடம் தயங்காமல் செல்லும் நாம், மனசு சரியில்லை என்றால் தயக்கம் காட்டுகிறோம். உடலில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தலைவலி போல் நம்முடைய மனதிலும் பல்வேறு எண்ண ஓட்டங்கள் உள்ளது
அவற்றை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

இன்டராக்ட் கிளப் தலைவர் மாணவர் கவின் குமார் பேசுகையில்
உலக மனநல தினம் அக். 10ல் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. மனநலம் சரியாக இல்லாவிட்டால், முற்றிலும் நாம் முடங்கி விடுவோம். இன்றைய மாணவர்கள் பயம், குழப்பம், தீய எண்ணங்கள், மன அழுத்தம், தன்னம்பிக்கை இழப்பு, உடல் பிரச்னை, துாக்கமின்மை, குடும்ப பிரிவுகள் என பல்வேறு பிரச்னைகளை வெளியே கூற முடியாமல், மவுனமாகவே இருந்து துன்பப்படுகின்றனர். மன நலமும் உடல் நலமும் நாணயத்தின் இரு பக்கம் போன்றது. உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு, அதாவது மொத்த மக்கள் தொகையில், 13.6% பேருக்கு மனநல பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை தவிர்க்க மனநல ஆலோசனை தேவைப்படுவோர் 14416 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என கூறினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியை சகாயராணி அவர்கள் ஒருங்கிணைத்து மாணவர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் இன்டராக்ட் கிளப் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *