காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் காவலர்களின் ஆரோக்கியத்தை காப்பதில் யோகா மற்றும் கராத்தேவின் பங்கு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
Advertisement
திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் H.M. ஜெயராம் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா ஆகியோர் தலைமையில் திருச்சி மாவட்ட ஆயுதப் படையில் உள்ள மஹாலில் திருச்சி சரகத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு பணியின்போது ஏற்படும் மன அழுத்தம் மற்றும் தேவையான ஓய்வின்றி பணிபுரியும் போது ஏற்படும் உடல் ஆரோக்கியமின்மை ஆகியவற்றிலிருந்து உடலையும் மனதையும் பாதுகாத்துக் கொள்ள யோகா மற்றும் கராத்தே போன்ற உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து காவலர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் காவலர்கள் சுமார் 50 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும், குடிப்பழக்கத்தினால் தனிஒருவர் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி சமுதாயத்திலும் அவப்பெயர் ஏற்படுவதால் குடிப்பழக்கத்தை அனைவரும் கைவிட வேண்டும் எனவும் மத்திய மண்டல காவல் துறை தலைவர் அறிவுரை வழங்கினார். மேலும் ஒவ்வொருவருடைய குறைகளையும் தனித்தனியாக பொறுமையுடன் கேட்டு அதனை நிவர்த்தி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுகளையும் வழங்கினார்.
Advertisement
Comments