இந்திரா கணேசன் கல்வி குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை மற்றும் மாணவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் நீர் சங்கம், திருச்சிராப்பள்ளி இணைந்து 16.10.2025 அன்று “பிளாஸ்டிக் அகற்றல் நாள்” நிகழ்வை சிறப்பாக நடத்தினர்.
நிகழ்ச்சியில் இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் . ஜி. இராஜசேகரன், இயக்குநர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன், மற்றும் பதிவாளர் டாக்டர் எம். அனுசுயா கலந்து கொண்டு, மாணவர்களுக்கு ஒற்றைமுறை பயன்பாட்டு நெகிழிப் பொருட்களை தவிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர்.
மாணவர்கள் இந்நிகழ்வில், கல்லூரி வளாகம் மற்றும் தங்கள் வீடுகளில் ஒற்றைமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களை முழுமையாக தவிர்க்கும் உறுதிமொழி எடுத்தனர். மேலும், நெகிழி பைகள் மற்றும் நெகிழி தண்ணீர் பாட்டில்களை அகற்றி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
நெகிழி பொருட்களை முற்றிலும் அகற்றுவது எதிர்கால தலைமுறையினருக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான உலகை உருவாக்கும் முக்கியமான படியாகும் என்பது இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
இந்திரா கணேசன் கல்வி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களிலும் உள்ள மாணவர் சுற்றுச்சூழல் மற்றும் நீர் சங்க உறுப்பினர்கள், நெகிழி பைகள், நெகிழி பாட்டில்கள், குவளைகள் ஆகியவற்றை தங்கள் வளாகங்களில் இருந்து அகற்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்களின் பங்களிப்பைச் செய்தனர்.
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பை ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் கே. சித்ராதேவி (முதல்வர், அலைடு ஹெல்த் சயின்ஸ்), முனைவர் ஸ்ரீராம், முனைவர் ஆர். பரத் குமார் மற்றும் முனைவர் பப. வரலட்சுமி திறம்பட முன்னெடுத்து, நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments