Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து மூன்று நாட்களான குழந்தை கடத்தல்

திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி சுகன்யா. கர்ப்பிணியான சுகன்யா கடந்த 11ம் தேதி பிரசவத்திற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அவருக்கு உறுதுணையாக அவரது உறவினர் பிரேமா இருந்துள்ளார்.
இந்த நிலையில் அதே பிரிவில்,
சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவர் சுகன்யாவிற்கு அறிமுகமாகி உள்ளார். தன் பெயர் மீனாட்சி என கூறி சுகன்யாவிடம் பேசி வந்துள்ளார். அவ்வப்போது சுகன் யாவிற்கு அந்த பெண் உதவி செய்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தி விட்டு வருகிறேன் சுகன்யா அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அப்போது அந்த பெண் நான் சென்று தடுப்பூசி செலுத்தி விட்டு வருகிறேன் என குழந்தையை வாங்கிச் சென்றுள்ளார் நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சுகன்யா மருத்துவமனையில் தேடி உள்ளார்.

ஆனால் அந்த பெண்ணையும் குழந்தையும் காணவில்லை இது குறித்து சுகன்யா பெற்றோர்களுக்கு தகவல் அளித்தார். எல்லோரும் குழந்தையை நீண்ட நேரமாக தேடினர். குழந்தையுடன் சென்ற பெண்ணை காணவில்லை. இதனைத் தொடர்ந்து குழந்தை காணாமல் போனதாக அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் மருத்துவமனையில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் சுகன்யாவின் உறவினர்களுடன் அரசு மருத்துவமனை முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள சிசிடிவியில் குழந்தை கடத்தப்பட்ட காட்சி பதிவாகியுள்ளதா எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் சுகன்யாவிடம் அந்த பெண் தன்னுடைய பெயர் மீனாட்சி எனக் கூறிய நிலையில் மீனாட்சி என்கிற பெயரில் மூன்று நாட்களுக்கு முன்பு யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளது

இந்த நிலையில் திட்டமிட்டு குழந்தையை கடத்த வேண்டும் என போலியான பெயர் கூறி அந்தப் பெண் சுகன்யாவிடம் பழகி இருக்கலாம் என தெரிய வருகிறது இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *