பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று காலை திருச்சி அரசு மருத்துவமனையில் வாயிலில் கலைப் பிரிவு மாவட்ட தலைவர் ராகவேந்திரா தலைமையில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சரவணன் கலந்துகொண்டு அன்னதானத்தை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மன்றத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு காமராஜர் பேரவைத் தலைவர் கள்ளிக்குடி குமார் தலைமையில் நடைபெற்ற பாலாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெருந்தலைவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவர் தொட்டியம் சரவணன் ,மாவட்ட துணை தலைவர் முரளி, பொதுச் செயலாளர்கள் அண்ணாசாலை, விக்டர் ,பஜார் மைதீன் மகளிரணி அஞ்சு கலைப்பிரிவு ராஜீவ் காந்தி சண்முகம் நிர்மல்குமார் மன்சூர் ஐயப்பன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு காமராஜருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments