தமிழ்நாட்டில் தமிழ் கடவுள் முருகனின் ஆலயத்தில் தீபம் ஏற்ற விதிக்கப்பட்ட தடையை கண்டித்தும், தடையை நீக்ககோரி சஷ்டி தினமான இன்று விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வழிவிடு வேல்முருகன் கோவிலில் இன்றுமாலை சிதறுதேங்காய் உடைத்து பிரார்த்தனை நடத்தப்போவதாக

அறிவிக்கப்பட்ட நிலையில், கோவிலில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காய் கொண்டு வருகின்றனர் என்றும் சோதனைசெய்து தேங்காய்களை பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, திருச்சி வரகனேரி பகுதியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில்

முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து பின்னர் திருக்கோவில் வாசலில் கற்பூரம் ஏற்றி பின்னர் சிதறுதேங்காய் உடைத்து “வெற்றிவேல் முருகனுக்கு – அரோகரா” “வீரவேல் முருகனுக்கு அரோகரா” பக்தி முழக்கமிட்டவாறு வழிபாடு செய்ததுடன், திருப்பரங்குன்றம் தீபத்தூரில் நிச்சயம் தீபம் ஏற்றுவோம் ஆட்சியாளர்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் முருகனை வணங்கி கேட்டுக்கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments