திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம்,
அணியாப்பூர் கிராமம், வீரமலைப் பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், 02.09.2025 ஆம் தேதி முதல் 04.09.2025 ஆம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும் 53 BN Indo Tibetian Border Police Force பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருப்பதால், அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
Comments