அக்டோபர் இரண்டாம் தேதி தமிழக முழுவதும் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு வழங்க முடியாது என மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்காக திருச்சி மாநகர் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது இந்நிலையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் இரண்டாம் தேதி அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து திருச்சியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments