வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள்ளதங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் தங்கம் நூதனமான முறையில் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை கண்டறிந்து திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை கைப்பற்றி வருகின்றனர்.
நேற்றைய தினம் சூட்கேஸ் சுற்றி ஒயர்களுக்குள் 686 கிராம் எடை கொண்ட 38 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து அந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணி தங்கத்தை பேஸ்ட்களாக வைத்து தைத்து 42 லட்சம் மதிப்புள்ள 697 கிராம் எடை தங்கம் கடத்தி வந்தது சோதனையில் தெரிய வந்தது.
பேண்ட் மற்றும் சூட்கேஸ்ல் விதவிதமாக நூதன முறையில் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்படுவது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments