அடேங்கப்பா அக்டோபரில் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா !!

அடேங்கப்பா அக்டோபரில் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா !!

அக்டோபர் மாதத்திற்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும், வரும் அக்டோபர் மாதத்தில் பல பண்டிகைகள் வருகின்றன. இதன் காரணமாக வங்கி விடுமுறை பட்டியல் சிறிது நீளமாக இருக்கிறது. அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி, அக்டோபர் மாதத்தில்  16 நாட்களுக்கு வங்கிகளில் வேலை இருக்காது.இதில் இரண்டு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களும் அடங்கும்.

இத்தகைய சூழ்நிலையில், வங்கி விடுமுறைகளின் பட்டியலை அனைவரும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இருப்பினும், இப்போதெல்லாம் வங்கி தொடர்பான பெரும்பாலான பணிகள் ஆன்லைனில் அல்லது டிஜிட்டல் முறையில் செய்யப்படுகின்றன. என்றாலும் இன்னும் சில பணிகளுக்கு நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது என்பதென்னவோ உண்மை. இதன் காரணமாக நீங்கள் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலைப் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

மாதத்தின் முதல் நாளான அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதியும்  விடுமுறை அளிக்கப்படுகிறது. பின்னர் அக்டோபர் 8ம் தேதி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, அன்றும் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதற்குப்பிறகு, அக்டோபர் 14 இரண்டாவது சனிக்கிழமை அத்தோடு மஹாளய அமாவாசையும் சேர்ந்து கொள்கிறது இதனால் அன்றைய தினமும் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். அக்டோபர் 15ம் தேதி மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

இதற்குப் பிறகு, கதி பிஹு தினத்தன்று குவஹாத்தி மண்டலத்தின் வங்கிகள் அக்டோபர் 18ம் தேதியன்று மூடப்பட்டிருக்கும். அக்டோபர் 21ம் தேதி துர்கா பூஜை அல்லது மகா சப்தமியின் பொழுது அகர்தலா, கவுகாத்தி, இம்பால் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை காரணமாக அக்டோபர் 22ம் தேதி நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். இதற்குப் பிறகு, அக்டோபர் 23 அன்று, தசரா மற்றும் மகாநவமியின் பொழுது, ​அகர்தலா, பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, குவாஹாத்தி, ஹைதராபாத், கான்பூர், கொச்சி, கோஹிமா, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 24 அன்று, விஜயதசமி அதாவது துர்கா பூஜையை முன்னிட்டு, ஹைதராபாத் மற்றும் இம்பால் தவிர அனைத்து இடங்களிலும் வங்கிகள் மூடப்படும். அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தசைன்யா பண்டிகையை முன்னிட்டு காங்டாக், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். லட்சுமி பூஜையையொட்டி, கொல்கத்தாவில் உள்ள வங்கிகள் அக்டோபர் 28ம் தேதி செயப்படாது. அக்டோபர் 29 அன்று ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31ம் தேதி அகமதாபாத் வங்கிகள் மூடப்படும். ஆக கிட்டத்தட்ட 16 நாட்கள் பெரும்பாலான வங்கிகள் செயல்படாது என்ன சரிதானே இப்பொழுதே உங்கள் பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுங்கள் மக்களே !.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision