திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு வரும் மாற்றுதிறானிகள்,வயதானவர்கள், பெண்கள் தங்களது மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் இருந்து அலுவலகத்திற்கு உள்ளே

இறக்கி விடுவதற்கு பேட்டரி வாகனம் உள்ளது. அந்த வாகனத்தை தற்பொழுது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலக சாலை வழியாக நீண்ட தூரம் பயணித்து அதில்
பயணிப்பவர்களை இறக்கி விட்டு வரும் காட்சி அரங்கேறி வருகிறது. குறிப்பாக இந்த வாகனம் மாற்றுத்திறனாளிகள் வயதானவர்களுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளேயே இயங்கக்கூடியது. இதனை சாலையில் பொதுவாக இயக்கக் கூடாது இந்த பேட்டரி வாகனத்தை சாலையில் இயக்குவதற்கு யார் அனுமதி

கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. வாகனங்கள் பயணிக்க கூடிய இந்த சாலையில் ஆட்சியர் அலுவலக ஊழியர்களை ஏற்றுக் கொண்டு யார் அனுமதி உடன் இந்த வாகனத்தை இயக்குகிறார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் இந்த பேட்டரி வாகனத்தை சாலையில் பயணித்து நீண்ட தூரம் அமர வைத்து இறக்கிவிடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
விபத்து எதுவும் ஏற்பட்டால் யார் இதற்கு பொறுப்பேற்பது என்ற கேள்வியும் எழுப்பி உள்ளனர்.விபத்து ஏற்பட்டால் காப்பீடு கூட கிடைக்காது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments