திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகஇனைவு பெற்ற திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுகை ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் , மாணவர்களுக்கான 43 வது வருட தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் திருச்சி அண்ணா விளயாட்டரங்கில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது.

53 கல்லூரிகளிலிருந்து 523 மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு 22 பிரிவின் கீழ் நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் பிரிவில் 11 தங்கம், 9 வெள்ளி, 1 வெண்கலம் பதக்கங்களுடன் பிஷப் ஹீபர் கல்லூரி பதக்கங்களுடன் அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது.
7 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களுடன் செயின்ட் ஜோசப் கல்லூரி இரண்டாவது இடத்தையும், 2 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களுடன் ஜமால் முகமது கல்லூரிமூன்றாவது இடத்தையும் இடத்தை பிடித்தன
சிறந்த தடகள வீரராக ஜமால் முகமது கல்லூரியை சேர்ந்த பரந்தாமன் கிருஷ்ணன் தேர்ந்தெடுக்கபட்டார்.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகதுணைவேந்தர் குழு உறுப்பினர்கள்
வி. ராஜேஷ் கண்ணன், ஆர். சக்தி கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகளாக கலந்து கொண்டு, பேராசிரியர் மற்றும் விளையாட்டு செயலாளர் ஏ. மெஹபூப் ஜான், திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் ஓ. ஞானசுகந்தி ஆகியோர் முன்னிலையில் பரிசுகளை வழங்கினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments