திருவெறும்பூர் அருகே உள்ளது பாரதிதாசன் பல்கலைக்கழகம்இங்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த கந்தராஜ் மகன் பிரபாகரன் (22) பிபிஏ படித்து வருகிறார். இவர் நேற்று இரவு இவரது நண்பர்கள் விஷ்வா ஹரிஷ் ஆகியோருடன் பல்கலைக்கழகம் எதிரே உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது அங்கு வந்த வடக்கு வீரம் பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஹேமானந்த் அப்பு ஆகிய நபர்கள் மாணவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது மேற்படி நபர்கள் குடிபோதையில் மாணவர்களை தாக்கி விட்டு திடீரென்று தப்பித்து விட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் எதிரிகள் மூவரையும் போலீசார் கைது செய்ய வேண்டி பல்கலைக்கழகம் முன்பு திருச்சி புதுக்கோட்டை சாலையில் நேற்று இரவு சாலை மறியல் செய்தனர்
சம்பவ இடத்திற்கு நவல்பட்டு போலீசார் விரைந்து சென்று மாணவர்களிடம் எதிரிகளைப் பிடித்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர் மாணவர்களை தாக்கிவிட்டு தப்பி சென்ற மூன்று நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments