Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகராட்சி சார்பில் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி – கலந்துகொள்ள ஆணையர் அழைப்பு!

திருச்சி மாநகராட்சியின் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் CYCLING 4 CHANGE- CHALLENGE சர்வே இந்த மாதம் 14ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. இதில் திருச்சி மாநகர பொதுமக்கள் சுமார் 4673 பேர் தங்களது கருத்தினை கணினி வலைதளம் வாயிலாக பதிவேற்றம் செய்துள்ளனர். இதற்காக பொதுமக்கள் மிதி வண்டி ஓட்டுவதை ஊக்குவிப்பதற்கும் வகையில் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்‌.

Advertisement

இந்த மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, காவல் ஆணையர் லோகநாதன் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், அரசு அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியில் பங்கேற்கின்றனர். திருச்சி தலைமை தபால் நிலையம் கன்டோன்மென்ட் பகுதியில் வருகின்ற 31ம் தேதி அன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்து தென்னுர் அண்ணாநகர் உழவர் சந்தை வரை மிதிவண்டி பேரணி நடைபெற உள்ளது.

Advertisement

 எனவே இந்த மிதிவண்டி பேரணியில் மிதி வண்டி ஓட்டுபவர்கள் மற்றும் பொதுமக்கள் மிதிவண்டி பேரணியில் பங்கேற்க வேண்டுமென மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார் .

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *