பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சௌதாமணி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக திமுக திருச்சி மத்திய மாவட்ட ஐடி பிரிவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். இதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல், வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு சென்னையில் இருந்த சௌதாமணியை கைது செய்தார்.
மேலும் சவுதாமணி மீது இந்திய தண்டனைச் சட்டம் கலகம் செய்யத் தூண்டுதல் ( 153 ) அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 2 நீதிபதி பாலாஜி முன் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் எவ்வித முகாந்திரமும் இல்லை எனக் கூறிய நீதிபதி, சவுதாமணியின் நீதிமன்ற காவலை நிராகரித்து பிணையில் விடுவித்தார். மேலும் போலீசார் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments