பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு, "வேலியில் போற ஓணானை பிடித்து வேட்டிக்குள் விட வேண்டும்?" - திமுக எம்.எல்.ஏ மகேஷ் பேட்டி!!

பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு, "வேலியில் போற ஓணானை பிடித்து வேட்டிக்குள் விட  வேண்டும்?" - திமுக எம்.எல்.ஏ  மகேஷ் பேட்டி!!

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மகேஷ் பொய்யாமொழி கடந்த 5 நாட்களில் ஆன்லைன் மூலம் 1.16 பேர் திமுகவில் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களில் திமுக போட்டியிட வேண்டும் என்பது எங்களைப் போன்றவர்களின் விருப்பம். ஆனால் தலைவர் முடிவு செய்வார். கூட்டணிக் கட்சிகளை திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது குறித்தும் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சர் என்று கூட்டணிக் கட்சிகள் உறுதியாக உள்ளன. கூட்டணியும் உறுதியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரலைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நண்பராக நான் விரும்புகிறேன்" என்றார்

'பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை ஐஏஎஸ் உடன் விவாதம் நடத்த நீங்கள் தயாரா?' என்ற கேள்விக்கு, "வேலியில் போற ஓணானை பிடித்து வேட்டிக்குள் விட வேண்டும்?" என்று திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நழுவல் பதிலளித்தார்.

Advertisement

மக்களுடன் தொடர்பு கொள்ளும் நவீன தொழில்நுட்பங்களில் அதீத ஆர்வம் காட்டுவதில் கலைஞர் வழியில் ஸ்டாலின் நடைபோடுகிறார். இளைஞர்கள் ஆர்வமுடன் திமுகவில் சேர்ந்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement