தமிழகத்தில் வேண்டுமென்றே பிரச்சனை உண்டு செய்வதற்காக பாஜக இது போன்ற உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி அரசியல் செய்கிறது இதை மக்கள் ஏற்க மாட்டார்கள்- திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேட்டி
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை ஒட்டி திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த திரு உருவ படத்திற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார் அதற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்
தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது, முறையான நிதியை தமிழகத்திற்கு வழங்கவில்லை என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் ஆனால் இந்த கரூர் விவகாரத்தில் 8 பாஜக எம்பிகள் உடனடியாக தமிழகத்திற்கு வருகிறார்கள் தமிழகத்திற்கான எந்த பிரச்சனைகளுக்கும் பாஜக குரல் கொடுக்கவில்லை, எங்கே இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்கிறதோ அங்கு கெட்ட பெயரை உண்டாக்குவதற்காக உடனடியாக பாஜக செயல்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகள் கரூர் விவகாரம் குறித்து தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். முதல்வர் கூட யாரைப் பற்றியும் குறை கூறாமல் தெளிவான அறிக்கையை முதல்வர் வெளியிட்டிருக்கிறார். வேண்டுமென்றே பிரச்சனை உண்டு செய்வதற்காக பாஜக இது போன்ற உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி அரசியல் செய்கிறது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள் அவர்களுக்கு உண்மை என்ன என்பது அவர்களுக்கு தெரியும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments