7 கிராமங்களில் தேர்தல் பரப்புரை செய்யாத  வேட்பாளர்கள். வீடுகளில் கறுப்பு கொடி  கட்டி தேர்தல் புறக்கணிப்பு.

7 கிராமங்களில் தேர்தல் பரப்புரை செய்யாத  வேட்பாளர்கள். வீடுகளில் கறுப்பு கொடி  கட்டி தேர்தல் புறக்கணிப்பு.

லால்குடி அருகே அரசு அதிகாரிகளை கண்டித்து  கீழன்பில், கோட்டைமேடு, பருத்திகால், மங்கம்மாள்புரம், ஜங்கமராஜபுரம், அண்ணாநகர், குறிச்சி ஆகிய 7  கிராம மக்கள் வீடு, வீடாக கறுப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

லால்குடியை அடுத்த அன்பில்அருகே ஜங்கராஜபுரம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஆச்சிராமவள்ளியம்மன் கோவில் திருவிழா கடந்த மார்ச் 8 ம்தேதி நடைபெற்றதில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக செயல்பட்ட லால்குடி அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு செய்கின்றனர்.


   
  லால்குடி தொகுதியில் உள்ள இந்த 7 கிராமத்தில் இது வரை எந்த வேட்பாளரும், தேர்தல்பணியோ, பிரச்சாரமோ செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81