Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வாழ்க்கையில் முன்னேற முன்னோர்கள் ஆசி முக்கியம் அமைச்சரே!!

மகாளயம் என்றால் “கூட்டமாக வருதல்”. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். “பட்சம்” என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம்…இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படுகிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது என்கிறார்கள் நம் முன்னோர்கள். மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் மட்டுமே செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம்… 

ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போதுதான் நினைவு கூர வேண்டும். தீர்த்த கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும்… அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும்.

நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறைக்கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.

மகாளய பக்ஷ்த்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன…

முதல்நாள் – பிரதமை – பணம் சேரும்

2ம் நாள் – துவிதியை – ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும்..

3ம் நாள் – திரிதியை – நினைத்தது நிறைவேறும்

4ம் நாள் – சதுர்த்தி – பகைவர்களிடம்இருந்து பாதுகாக்கும்

5ம் நாள் – பஞ்சமி – வீடு, நிலம் முதலான சொத்து வாங்கும் வாய்ப்பு அமையும் 

6ம் நாள் – சஷ்டி திதி புகழ் கிடைக்கும்

7ம்நாள் – சப்தமி திதி சிறந்த பதவிகளை கிடைக்கும் 

8ம் நாள் – அஷ்டமி திதி சமயோசித புத்தி, அறிவாற்றல் ஆகியவை கிடைக்கும் 

9ம்நாள் நவமி திதி சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல் ஆகிய பலன்கள் கிடைக்கும். 

10ம் நாள் – தசமி திதி நீண்நாள்கள் ஆசை நிறைவேறும் 

11ம்நாள் – ஏகாதசி திதி படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி கிடைக்கும் 

12ம் நாள் – துவாதசி திதி – தங்கநகைகள் ஆபரணங்கள் சேரும் 

13ம்நாள் – திரயோதசி திதி – பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில் ஆகியவை கிடைக்கும் 

14ம்நாள் – சதுர்த்தசி திதி – செய்த பாவங்கள் நீங்கி, எதிர்கால தலைமுறைக்கு நன்மைகள் கிடைக்கும் 

15ம் நாள் – மகாளய அமாவாசை திதி முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் ஒருர முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் நமக்கும் நம் தலைமுறைக்கும் சேர்த்து வாழ்க்கை செல்வங்கள் பெருகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *