திருச்சி மாவட்டம் பச்சைமலை சின்ன இலுப்பூர் பகுதியில் உள்ள உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பழகுடியினர் மாணவி சரண்யா அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து சாதனை…
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வண்ணாடு ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன இழுப்பூர் பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 2024- 2025 ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய சரண்யா என்ற மாணவி அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடத்தில் உள்ளார்
மேலும் இவர் 480 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தில் உள்ளார் இவர் எதிர்காலத்தில் IAS அதிகாரியாக வரவேண்டும் என்று லட்சியம் இருப்பதாக தெரிவித்தார்.பச்சைமலை சின்ன இலுப்பூர் பகுதியில் உள்ள அரசு உண்டு உறை விட மேல்நிலை பள்ளியில் 14 மாணவர்கள் மற்றும் 9 மாணவிகள் உள்பட 23 நபர்கள்
2024- 2025 ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய நிலையில் பள்ளியானது 100% தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அரசு இந்த பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி சரண்யாவிற்கு தலைமை ஆசிரியர் செல்வம் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments