திருச்சி கண்டோன்மென்ட் காவல் கட்டுப்பாட்டு அறைக்ககு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சற்று நேரத்தில் வெடிக்க உள்ளதாகவும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து உடனடியாக ரோந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதற்கிடையில் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த நபரின் தொலைபேசி எண்ணை வைத்து காவல்துறையினர் அவர் யார் என்று தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைந்து வந்தனர். பின்னர் வெடிகுண்டு கண்டறியும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் பிடித்த விசாரணை செய்தனர். இதில் பஞ்சப்பூரை சேர்ந்த பழனிசாமி என்பதும் மது போதையில் காவல் கட்டுப்பாட்டறைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்றால் அலறி அடித்துக் கொண்டு போலீஸ் வருவீர்கள் ஆனால் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் யாரும் வர மாட்டீர்கள் எனவும் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார். இரவு நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செய்தி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments