Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன்- கையும் களவுமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்!

திருச்சி மாவட்டம் சந்து தெருவை சேர்ந்தவர் ராம்(27) நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு முகநூல் மூலம் புதுக்கோட்டை இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் ஜனனி என்ற பெண்ணிடம் நட்பு ஏற்பட்டு, பிறகு காதலாகி இருவரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். காதலித்த பொழுது திருச்சி மற்றும் புதுக்கோட்டை யில் உள்ள நண்பர்களின் வீடுகளுக்கு சென்று வருவதையும் அங்கு தங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் திடீரென ராம் தனது வீட்டில் பெண் பார்ப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் ஜனனி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் ராமிற்கு பார்க்கப்பட்ட பெண்ணுக்கு தகவல் தெரிந்து திருமணம் நின்று போனது. புகாரின் அடிப்படையில் ராம் காவல் நிலையத்திற்கு வருமாறு காவல்துறையினர் தெரிவித்தும் வரவில்லை.

புகாரில் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஜனனி திருச்சி கோட்டை காவல்நிலையத்தில் மீண்டும் புகார் அளித்த நிலையில், திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு காவல்துறையினர் தெரிவித்தனர். கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாததால், காவல் நிலையத்திற்கு வந்த ராம் வெளியில் செல்ல முயலும் பொழுது அவனை மடக்கிப் பிடித்து மீண்டும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் ஜனனி.

எப்ஐஆர் பதிவு செய்யப்படாதது தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். தொடர்ந்து ஜனனியிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும் அவர்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் நண்பர்களின் வீடுகளிலும் காவல்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து பேசிய ஜனனி தண்டனை கொடுத்தாலும் பரவாயில்லை, திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என ராம் தெரிவிப்பதாகவும், தன்னை ராமுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், மறுக்கும் பட்சத்தில் உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நான்கு வருடமாக காதலித்து விட்டு வசதி அதிகமான பெண் பார்த்தவுடன், காதலித்த பெண்ணை கைவிட்டு சென்ற காதலனை மடக்கிப் பிடித்து காவல் துறையில் ஜனனி ஒப்படைத்ததும், FIR பதிவு செய்ய சொல்லி நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டதும் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Advertisement

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *