தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவுதிட்டத்தை திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் உள்ள பாயிலர் பிளான்ட் நடுநிலைப்பள்ளி, துவாக்குடி என்ஐடியில் உள்ள மண்டல பொறியியற் கல்லூரி நடுநிலைப்பள்ளி ஆகியவற்றை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் பசியை போக்கும் வகையில் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
அதன் அடிப்படையில் அந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டிருக்கிறது இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அந்தத் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
அதனைத் தொடர்ந்து இன்று சென்னை மயிலாப்பூரில் நகர்புறத்துத்தில உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் உள்ள பாயிலர் பிளாண்ட் நடுநிலைப்பள்ளியிலும் துவாக்குடி என்ஐடி வளாகத்தில் உள்ள மண்டல பொறியியற் கல்லூரி நடுநிலைப் பள்ளியிலும்ம் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பாயிலர் பிளாண்ட் நடுநிலைப்பள்ளி
காலை உணவு திட்டத்தின் மூலம் 294மாணவ மாணவிகள் பயன்பெறுகின்றனர் அதேபோல் என்ஐடி வளாகத்தில் மண்டலப்பொறியியற் கல்லூரி.நடுநிலைப் பள்ளியில் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் 69 பேரும் பயன்பெறுகின்றனர்.
இன்று மாணவ மாணவிகளுக்கு கேசரி பொங்கல் சாம்பார் வழங்கப்பட்டது.
இனி வரும் காலங்களில்
உணவு வகைகள் திங்கள் கிழமை
வெண்பொங்கல், காய்கறி சாம்பார்,
செவ்வாய்கிழமை ரவா காய்கறி கிச்சடி, காய்கறி சாம்பார்,
புதன்கிழமை வெண்பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை,
ரவா உப்புமா, காய்கறி சாம்பார்
வெள்ளிக்கிழமை சேமியா காய்கறி கிச்சடி, காய்கறி சாம்பார் வழங்கப்படுகிறது
இது தினசரி ஒரு குழந்தைகளுக்கு
ஒரு குழந்தைக்கான உணவு அளவு
ரவா = 50 கிராம், அரிசி = 50 கிராம், சேமியா = 50 கிராம். பருப்பு வகை = 15 கிராம், எண்ணெய்: 3 மில்லி, தாளிப்பு: 5 கிராம். காய்கறி : 50 கிராம்என்ற வீதத்தில் காலை உணவு வழங்கப்படுகிறது.
இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா, திருச்சி டிஆர்ஓ ராஜலட்சுமி கூத்தைப்பார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், துவாக்குடி நகராட்சி தலைவர் காயாம்பூ மற்றும் அரசு அலுவலர்களும் கட்சி பிரதிநிதிகளும் பள்ளி ஆசிரியர் பெருமக்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments