தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்கர்களை தவறாக பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் தேனியில் வைத்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்ததை அடுத்து 10ம்தேதி இரவு டெல்லியில் திருச்சி தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் இதுவரை அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அவரது மனைவி ஜேன்ஆஸ்டின் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அங்கு காவல்துறையினர் இல்லாததால் சுமார் 45 நிமிடம் காத்திருந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அவர்….. எனது கணவரை கைது செய்த பின்னர் இதுவரை அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலும் இல்லை. இது குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தால் இங்கு புகார் பெற்றுக் கொள்ள காவல்துறை அதிகாரிகள் இல்லை.

எனது கணவரை கைது செய்த திருச்சியை சேர்ந்த காவல் ஆய்வாளர், அவரை கைது செய்துள்ளோம் விரைவில் திருச்சிக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார். அதன் பிறகு எந்தவித தகவலும் இதுவரை எனக்கு வழங்கப்படவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, எனது கணவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து எனக்கு எந்த விபரமும் காவல்துறையினர் வழங்க மறுக்கின்றனர்.

இது குறித்து நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம். இன்று இரவுக்குள் திருச்சி காவல்துறையினர் கண்டிப்பாக எனக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். கைது செய்வதில் தவறில்லை. ஆனால் 48 மணி நேரம் மேல் கடந்தும் இதுவரை நீதிமன்றத்தில் ஏன் ஆஜர்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           126
126                           
 
 
 
 
 
 
 
 

 12 May, 2024
 12 May, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments