திருச்சி மொண்டிப்பட்டி தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்(TNPL) பணிபுரிவர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அதில் 13 வீடுகளில் தொடர் திருட்டு நடைபெற்றுள்ளது. மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த குடியிருப்பில் 220 மேற்பட்ட வீடுகள் உள்ளன. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய பணியாளர்கள் அலுவலர்கள் இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். சுற்று சுவர் 12 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. உள்ளே ஒரு பால்காரர் வருவது கூட சோதனை செய்யப்பட்டு தான் அனுப்பப்படுவார்கள். இந்நிலையில் குடியிருப்பில் தங்கி இருந்தவர்கள் 13 பேர் ஊருக்கு சென்றுள்ளனர்.

ஊருக்கு சென்றவர்கள் வீடுகளில் மட்டும் கொள்ளை நடைபெற்று உள்ளது. இந்த சம்பவத்திற்கு யார் உடந்தையாக இருந்தார்கள் என்பது குறித்து மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு பாதுகாப்பான குடியிருப்பில் யார் 13 வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது என்பது குறித்து தீவிரமாக விசாரணையை காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments