Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பன்னாட்டு விமான நிலைய புதிய முனையத்திற்கு பேருந்து, பேட்டரி கார் வசதி – திருச்சியில் துரை வைகோ பேட்டி

மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து போது….. திருச்சி விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளேன். திருச்சி விமான நிலையம் சர்வதேச தரத்துடன் அமைந்துள்ளது. அதே நேரத்தில் அங்கு போதிய ஒடுதளம் இருந்தால் தான் விமானங்கள் வந்து செல்ல முடியும்.

எனவே ஓடு தள விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்துள்ளேன். விமான நிலையத்தில் இஸ்லாமியருக்கு தொழுகைக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இ-வாகனம் சேவை, கார்கோ விமானம் இயக்க பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்ய கவுண்டர்கள் அதிகம் அளவில் இருந்தாலும் அதிகாரிகள் குறைவு, பயணிகள் வருகை அதிக அளவில் உள்ளதால் அதிகாரிகள் அதிக அளவில் நியமிக்க பரிந்துரை செய்துள்ளேன்.

திருச்சி விமான நிலைய விரிவாக்கம் பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டது. மீதமுள்ள 5 சதவீத பணிகளை துரிதப்படும் வகையில் பேசி வருகிறோம். 155 ஏக்கர் பாதுகாப்புத்துறை இடம் இருந்து நிலங்கள் பெறப்பட்டுள்ளது. சில கிராமங்களுக்கான பாதை நடைபெறுவதால் தொடர்ந்து பேசி வருகிறோம் விரைவில் அந்த நிலங்களும் கையகப்படுத்தப்படும். திருச்சி விமான நிலையத்தில் சமஸ்கிருத்தில் பெயர் பலகை இருந்தது தேவையிலலாத ஒன்றாகும். அதனை படித்தால் பயணிகளுக்கு ஏதும் தெரியாது.

தற்சமயம் மூன்று பேருந்துகள் விமான பயணிகளை ஏற்றி, இறக்கிவிட ஏற்பாடு செய்யப்படுள்ளது. விமான நிலையத்தில் நிரந்தர பேருந்து சேவை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். வக்பு போர்டு சட்ட திருத்தம் தேவையில்லை. சென்னையில் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது ஆன்மீகம் சொற்பொழிவு அல்ல. சனாதானா சொற்பொழிவு. இவர் இந்து மத பெயரை கூறி பொழப்பு நடத்தும் அற்பன்.

இந்த விஷயத்தில் மகா விஷ்ணுவை அழைத்து வந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பூரண மதுவிலக்கு கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என்பதே மதிமுகவின் கொள்கை. படிபடியாக மதுக்கடையை அரசு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருக்கிறோம். தொடருவோம். மதவாத சக்தி வேறுன்ற கூடாத என்பது எங்களது நோக்கம். 2026ம் ஆண்டு தொடர வேண்டும் என்று தான் நினைக்கிறோம் என்றார்.

பேட்டியின் போது மாநில துணை பொதுச் செயலாளர் ரொகையா, மாவட்ட தலைவர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி. சேரன், மணவை தமிழ் மாணிக்கம், மாவட்ட துணைச் செயலாளர்கள் எல்லக்குடி அன்புராஜ், துரை வடிவேல், பகுதி செயலாளர்கள் ஆசிரியர் முருகன், முருகன், ஆடிட்டர் வினோத், கோபால கிருஷ்ணன், வட்டச் செயலாளர் சாதிக் ஆகியோர் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *