திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே தனியார் பேருந்தும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மினி லாரி டிரைவர் அய்யம்பாளையம் பாரதிநகரை சேர்ந்த மதிவாணன் (34) சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தனியார் பேருந்து ஓட்டுனர் முசிறி அருகே உள்ள எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜா (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn






Comments