திருச்சி மாவட்டம் சமயபுரம் பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள சமயபுரம் பேருந்து நிலையம். இங்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வருவதில்லை எனவும், பேருந்துகளை பேருந்து நிலையத்திற்கு வராமல் இருப்பதால் சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினசரி ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த கோயிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் வந்திருந்த அம்மனை தரிசித்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். அவ்வாறு வரும் ஏழை, எளிய பக்தர்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலமாக வந்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர்.
இங்கு வரும் பேருந்துகள் அனைத்தும் சமயபுரம் பேருந்து நிலையத்திற்குள் பயணிகளை இறக்கி விடாமல் சமயபுரம் நால் ரோட்டில் இருந்து சமயபுரம் பேருந்து நிலையம் வரும் வழியில் கடைவீதி பஸ் ஸ்டாப், சந்தை கேட் பஸ் ஸ்டாப், ஆதி மாரியம்மன் கோயில் வளைவு ஆகிய இடங்களில் நிறுத்தி பக்தர்களை இறக்கி விடும் பேருந்து நடத்துநர்கள் இதற்காக ஒதுக்கி உள்ள பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளை இயக்க மறுத்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்களும் வணிகர்களும் சமயபுரம் போலீசார் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments