Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி தூய வளனார் கல்லூரியில் கஃபே 2022 கலைவிழா

திருச்சி தூய வளனார் கல்லூரி, வணிகவியல் கணினித்துறை சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான மாபெரும் கலைவிழா கஃபே’2022 என்ற தலைப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி செயலர். அருட்திரு. பீட்டர் சே. ச தலைமை தாங்கினார். மேலாண்மைப் பள்ளி டீன் முனைவர். ஜான் முன்னிலை வகித்தார்.

துறைத்தலைவர் முனைவர். ரஜீஸ். பேரவை தலைவர் முனைவர். வெர்ஜின் பிராகா துணைத் தலைவர் முனைவர். அருள் மற்றும் மாணவ செயலர்கள் விழாவில் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பலர் போட்டிகளில் தங்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து பங்கேற்று சிறப்பித்தனர். மாலையில் நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர். அருட்திரு. ஆரோக்கியசாமி சேவியர் சே.ச தலைமை தாங்கினார்.

இணை முதல்வர். முனைவர் அலெக்ஸ் ரமணி முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு விருந்தினர் பிரின்ஸ் லியோ அலெக்ஸ், கலை இயக்குனர் ஸ்டோரிபோர்டு கலைஞர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் சுழற் கோப்பைகளை வழங்கினர். ஒட்டுமொத்த கலைப் போட்டியில் முதலிடத்தை ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியும்  , இரண்டாம் இடத்தினை திண்டுக்கல், ஜி.டி.என் கலை, அறிவியல் கல்லூரியும் வெற்றி பெற்றனர்.

விழாவின் மேலும் ஒரு சிறப்பம்சமாக வணிகவியல் கணினி துறையும், தமிழ்நாடு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் காலேஜ் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வினை முனைவர். ஜான் பிரபாகரன், முனைவர். மகேஸ்வரி, முனைவர். அற்புத சகாயராஜ், முனைவர். பாத்திமா மேரி, பேராசிரியர். புனிதவதி மற்றும்  மாணவர் பேரவையினர் இக்கலை விழாவினை ஒருங்கிணைத்தனர்.

இறுதியாக பேரவை தலைவர் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது. இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *