Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திறன் பயிற்சி மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் உதவித்தொகை பதிவு செய்ய அழைப்பு

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம், சென்னை TUFIDCO நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. K.விவேகானந்தன்.இ.ஆ.ப., அவர்களின் ஆலோசனைப்படி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப. அவர்களின் தலைமையில் 20.02.2025 அன்று மாநகரட்சியின் அறிவுசார் மையத்தில் மாநகராட்சி சுகதாரப் பணியாளர்கள் மற்றும் சுய உதவிகுழுக்களின் குடும்பங்களை சார்ந்தவர்கள் தொழிலில் பல்வேறு துறை சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெறுவதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 60 நபர்கள் கலந்துகொண்டனர்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள அறிவுசார் மையம் சார்பாக UPSC மற்றும் TNPSC உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மூலமாக காணொளி மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.அறிவு சார் மையங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி (Skill Training) வழங்கி உடனடியாக வேலை வாய்ப்பினை வழங்கிடவும், சுயமாக தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு அரசு மானியத்துடன் தொழில் கடன்கள் மற்றும் வங்கி கடன்கள் பெற்று அளிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) நிறுவனம் தமிழ்நாட்டில் வேலையில்லாத இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 18 முதல் 35 வயதுக்குட்பட்ட வேலையற்ற இளைஞர்கள் வேலை வாய்ப்பு இணைக்கப்பட்ட திறன் பயிற்சி திட்டங்களில் சேரலாம்.பயிற்சித் திட்டங்களி ன் தரத்தை உறுதி செய்வதற்காக மூன்றாம் தரப்பு சுயாதீன மதிப்பீடு மற்றும் சான்றிதழ் மாநில தொழில் பயிற்சி கவுன்சில் (SCVT) மற்றும் சம்பந்தப்பட்ட துறை திறன் கவுன்சில் (SSC) நடைபெறுகிறது. தகுதியான பயனாளிகளுக்கு உதவித்தொகை ரூ. 6,000/- முதல் ரூ. 12,000/-வழங்கப்படுகிறது

பயிற்சி முடிந்ததும். வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் பதிவேட்டில் ஒரு பகுதியாக இருப்பார்கள் விண்ணப்பதாரர்களின் மாநில கனஞ்சியமாகவும் வேலைவாய்ப்பு போர்ட்டலில் பதிவுசெய்த தனியார் தமிழ்நாடு திறன் இது திறமையான தமிழ்நாடு தனியார் நிறுவனங்கள் அணுகக்கூடியதாகவும் இருக்கும். இது குறுகிய கால திறன் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு உடனடியாக வேலை கிடைப்பதை உறுதி செயிறது.இத்தகைய இலவச சலுகைகள் பயன்படுத்திக்கொள்ள Tufdoo@nowledge centre_Trichy1.gmail.com என்ற இணையத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *