மேட்டூர் அணையிலிருந்து எதிர்வரும் ஜீன் 12 ஆம் தேதி காவிரி டெல்டா பகுதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 147 தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு பயிர்கடன் வழங்கிடவும், போதுமான அளவிற்கு இரசாயன உரங்கள் அனைத்து சங்கங்களிலும் இருப்பு வைத்திடவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ரூ.325.51 கோடி பயிர் கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று இந்த வருடம் குறுவை சாகுபடி மற்றும் இதர பயிர் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு தேவையின் அடிப்படையிலும், தகுதிகளுக்குட்பட்டும் பயிர்கடன் வழங்க ஆயத்த நிலையில் அனைத்து சங்கங்களும் உள்ளன.
மேலும், குறுவை சாகுபடிக்கு தேவையான யூரியா (1000 மெ.டன்), டி.ஏ.பி (400 மெ.டன்), எம்.ஒ.பி. (பொட்டாஷ்) (650 மெ.டன்), காம்ப்ளக்ஸ் (950 மெ.டன்) போன்ற உரங்கள் மொத்தமாக 3000 மெ.டன் இருப்பில் உள்ளது.

கூடுதலாக தேவைப்படும் உரங்கள் தழிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திலிருந்து கொள்முதல் செய்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டு போதிய அளவு உரங்களை இருப்பு வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பயிர்க்கடன் தேவையுள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட தொடக்க வோளண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் மனு, சிட்டா அடங்கல் சான்றுடன் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடன் மறுக்கப்பட்டலோ, கால தாமதம் ஏற்படுவதாக உணர்ந்தாலோ உடன் சரகத் துணைப்பதிவாளர் திருச்சி (9488605317), சரகத் துணைப்பதிவாளர், இலால்குடி (9488605317), சரகத் துணைப்பதிவாளர், முசிறி (8056676183) மற்றும் மண்டல இணைப்பதிவாளர் (7338749300) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve







Comments