Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

காலிகிராஃபி தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து!

கையெழுத்து என்பது தலையெழுத்தைத் தீர்மானிக்குமா? தெரியவில்லை. ஆனால், அழகாக எழுதத் தெரிந்தவர்களுக்குத் தலையெழுத்து மாறலாம். அதைச் செய்யக்கூடிய ஒன்றுதான் காலிகிராஃபி எனப்படுகிற அலங்கார எழுத்துப் பாணி. மிகப்பழைமையான இந்தக் கலை பல நவீன வடிவங்கள் எடுத்து, காலத்துக்கேற்ப மாறி, இன்றும் அழியாமல் இருக்கிறது.

பத்தாண்டுகளுக்கு மேலாக காலிகிராபி பயிற்சி அளித்து வரும் சரிக்கா பேசுகையில்….குழந்தை எழுதுவது அழகாக இல்லை என்றவுடன் இரட்டைக் கோடு, நாலு கோடுகள் உள்ள நோட்டுகளை வாங்கி தந்து, அதிக நேரம் எழுத சொல்லி வற்புறுத்தாதீர்கள், இதனால் அவர்களுக்கு எழுதுவதன் மீது வெறுப்புதான் உண்டாகும். குழந்தையின் கையெழுத்தை அழகாக மாற்ற வேண்டுமானால், முதலில் fine Motor skill என்ற கைகளின் தசைகளை வலுப்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி கை விரல்களுக்கு வேலைகள் கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள் உறுதி அடைந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

உங்கள் உடல் ஆரோக்கியம், புத்திசாலித்தனம், திறமை, இயல்பு, குணம், வலிமை, பலவீனம், அடிமைத்தனம், குற்றச் சிந்தனைகள், ஆர்வங்கள், வெறுப்பு மற்றும் திறன் போன்றவற்றை உள்ளடக்கிய அடையாளத்தைப் பற்றி கையெழுத்து நிறைய வெளிப்படுத்துகிறது.  கேலிகிராஃபி பயிற்சிக்கு அடிப்படை சாய்வுக் கோடு, மேல் வளைவு, கீழ் வளைவு ஆகிய மூன்று காரணிகள். சாய்வாக எழுத்துக்களை சேர்த்து எழுதும் கையெழுத்து (Cursive): பள்ளிகளில் முதல் சில வகுப்புகளில் cursive ரைட்டிங் என்ற எழுத்து பயிற்சி இருக்கும். அனைத்து பிள்ளைகளுமே இந்த பயிற்சியை செய்வார்கள். இதில் எழுத்துக்களை சாய்வாக ஒன்றுடன் ஒன்று இணைத்து எழுதுவது போல இருக்கும். எல்லா குழந்தைகளுமே இந்த பயிற்சி பெற்றாலும் எல்லோருக்குமே இந்த ஸ்டைலில் எழுத வராது.

எழுத்தின் ஸ்டைல் மாறி விடும். உங்களுடைய கையெழுத்து கர்சிவ் ரைட்டிங்காக, நீங்கள் எழுத்துகளை கோர்த்து எழுதும் பழக்கம் இருந்தால், நீங்கள் தெளிவான சிந்தனை கொண்டவர்உங்கள் கையெழுத்து தெளிவாக இருந்தால், நீங்கள் எப்பொழுதுமே தெளிவாக சிந்திப்பீர்கள், அவ்வளவு எளிதில் குழம்பிவிட மாட்டீர்கள் என்பதையும் குறிக்கும். உங்களுக்கு சுதந்திர மனப்பான்மை அதிகமாக இருக்கும். வெளிப்படையாக பேசுவீர்கள், அனைவரிடமும் மிக எளிதாக பழகி விடுவீர்கள்.அழகான கையெழுத்து உங்களுடைய உள்மன அழகையும் குறிக்கிறது. நீங்கள் எமோஷனலான நபர் மற்றவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சிப்பீர்.

இப்படி ஒரு குழந்தைகளின் குணாதிசியங்களை கையெழுத்தை வைத்து முடிவு செய்யலாம். ஆதிகாலம் முதலே மனிதர்கள் இயற்கையாகவே பழக்கவழக்கங்களின் அடிப்படையில் வாழும் தன்மை கொண்டவர்கள். ஒரு செயலை நாம் தொடர்ச்சியாக செய்யும்போது ஒரு கட்டத்திற்குப் பிறகு அதை எளிதான ஒன்றாக நமது மூளை உணர வைக்கிறது. அப்படிதான் எந்த ஒரு புதிய பழக்கமாக இருந்தாலும் அதை குறைந்தது 21 நாட்கள் நாம் செய்யும் போது, தொடக்கத்தில் கஷ்டமாக இருந்த அந்த விஷயம் காலம் செல்லச் செல்ல எளிதான ஒன்றாக மாறிவிடும். என்னுடைய பயிற்சி வகுப்புகள் குறைந்தது 21 நாட்கள் இருக்கும் 21 நாட்களிலேயே குழந்தைகளுடைய கையெழுத்தில் பல மாற்றத்தை காணலாம்.

திருச்சி கலை காவேரியில் வகுப்புகள் எடுத்து வருகிறோம் Mansa calligraphy எனது பெயரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி அளித்து வருகிறோம் .கொரோனா காலகட்டத்திற்கு பிறகு குழந்தைகளின் கையெழுத்தில் அதிக பள்ளிகள் கவனம் செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கு சென்றுநான்காம் வகுப்பிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கும், யூகேஜி படிக்கும் பள்ளி குழந்தைகளின் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறோம். கோடை விடுமுறை நாட்களை குழந்தைகளுக்கு பயனுள்ளதாக மாற்ற நினைக்கும் பெற்றோர்களுக்கு இந்த பயிற்சியானது மிக சிறந்த ஒன்று இது குழந்தைகளின் கையெழுத்தை மட்டும் மாற்றாமல் குழந்தைகளின் குணாதிசயங்களையும் மாற்றும் என்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *