திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பங்களிப்புடன், வேதா (எஸ்.ஆர்.யுனைடெட் இன்ப்ரா டெவலப்பர்ஸ்) மற்றும் சீனிவாச மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த மருத்துவ முகாமை நடத்தினர். சுமார் 250 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தேவையான மருந்து பாட்டில்கள், விட்டமின் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மண்டலம் 1: மாநகராட்சி உதவி ஆணையர் ச.வைத்தியநாதன் அவர்கள் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். வேதா நிறுவனத்தின் ஹெச்.ஆர் பொது மேலாளர் தெ.ரா. சண்முகம் முகாமின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததோடு இதேபோல் தொடர் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வேதா நிறுவனத்தின் செயல் பொருப்பாளர் M.கிஷோர், மண்டலம் 1 சுகாதார அலுவலர் S.கார்த்திகேயன் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தனர். மாநகராட்சி அலுவலர்கள் & பணியாளர்கள் மற்றும் வேதா குழுமமும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து முகாமினை நடத்தி முடித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments