Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ரத்த தானம் வழங்கலாமா

ரத்த தானம் என்பது உலகில் பல உயிர்களை காக்க இன்றளவும் சிறந்த தானங்களில் ஒன்றாகவும் கருதப்பட்டு வருகிறது. 18 வயது நிறைந்த அனைவரும் இரத்த தானம் வழங்கலாம். இதனால் ஒரு உயிரை காப்பாற்றிய மன நிம்மதியும் நமக்கு கிடைக்கும். கொரோனா  காலகட்டம் என்பதால் இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிக குறைந்துள்ளது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் கொரானா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பாக ரத்ததானம் செலுத்தி விடுங்கள் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் .

தன்னார்வலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பு  இரத்த தானம் செய்து விடுங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்த 28 நாட்களுக்கு தங்களால் ரத்ததானம் செய்ய இயலாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சியில்  தில்லை நகரில் செயல்பட்டு வரும் உயிர்த்துளி ரத்த வங்கி நிறுவனர் டாக்டர் பிரபாகரன் கூறுகையில்… முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பு இடைப்பட்ட காலத்தில் ரத்ததானம்  செய்யலாம். அரசின் அறிவிப்பை குறித்த கலந்தாலோசனை செய்வதற்கான கடிதம் ஒன்று ரத்த வங்கி கவுன்சில் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ரத்ததானம் ஒரு மாதத்திற்கு வழங்கக்கூடாது என்ற அறிக்கைகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது அதுமட்டுமின்றி தன்னார்வலர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் இது அமைந்துள்ளது தற்போது இரத்த தேவைக்கான அளவு குறைந்துள்ளது. சராசரியாக நடக்கும் அறுவை சிகிச்சைகளின் அளவு தற்போது குறைந்துள்ளது 500 யூனிட்  தேவைப்படும் இரத்தத்தின் அளவு 100 யூனிட் மட்டுமே தேவைப்படுகிறது. பிற்காலத்தில் ரத்தம் தேவைப்படும் போது ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த தட்டுப்பாடு வாய்ப்புகளும் உள்ளன.

இந்தியாவை பொருத்தவரை போடப்படும் தடுப்பூசிகள் வைரஸ்களை அளிக்கப்பட்ட ஒரு பகுதிதான் தடுப்பூசிகள் ஆக செலுத்தி வருகின்றனர். உயிருள்ள வைரஸ்களை உள் செலுத்தாத போது ரத்த தானம் வழங்குவதற்கு ஒரு வாரம் என்பதே அதிகபட்சமான  இடைவெளியாகும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஒன்றிலிருந்து மூன்று நாட்கள் கழித்து கூட ரத்த தானம் வழங்கலாம் இதுகுறித்தே தமிழக  அரசுக்கு ரத்த வங்கி கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *