திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 33 வது வார்டு செங்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளது. மிக அருகாமையிலேயே பாலக்கரை காவல் நிலையம் உள்ளது. இப்பகுதி பொதுமக்கள் எந்த நேரமும் நடமாட்டம் உள்ள பகுதி. இந்த பகுதியில் உள்ள மதுரவீரன் கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கஞ்சா செடிகள் வளர்ந்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் தகவலறிந்த பாலக்கரை காவல் நிலைய போலீசார்  கஞ்சா செடிகளை பிடுங்கி எடுத்து சென்றுள்ளனர். அரசு இடத்தில் கஞ்சா செடி வளர்ந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அடிக்கடி வாலிபர்கள் அப்பகுதியில் போதைக்கு கஞ்சா பயன்படுத்த அந்த பகுதியில் செல்வார்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்பொழுது போலீசார் கஞ்சாவை ஒழிக்க அதிரடி ஆசக்சனில் ஈடுபட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் திருச்சி மாநகரில் முக்கியமான பகுதியில் கஞ்சா செடி வளர்ந்து உள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments