திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறை மற்றும் தங்கும் அறைகளில் உள்ள நடைபாதைகளில் சுகாதாரமற்ற முறையில் உள்ளதாகவும், அதேபோல் ஆதரவற்றோர் அங்கு படுத்திருப்பதால் அங்கு வரும் பேருந்து பயணிகள் செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து கண்டோன்மெண்ட் சரக காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம், காவல் ஆய்வாளர் சேரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மோகன் ஆகியோர் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு அப்பகுதியை தூய்மைப்படுத்தி பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏற்றவாறு பேருந்து பயணிகள் தங்கும் அறைகள் செல்வதற்கும் ஏற்றவகையில் அப்பகுதி முழுவதும் தூய்மைபடுத்தப்பட்டு அசுத்தமாக இருந்த அந்த சுவர்கள் முழுவதும் வர்ணம் பூசப்பட்டுள்ளது.
மேலும் நடைபாதையில் புதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நலன் கருதி கண்டோன்மெண்ட் காவல்துறையினர் எடுத்துள்ள இந்த நடவடிக்கை பேருந்து பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO







Comments