Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் இரண்டாம் கட்டம்(தொகுதி 14.07.2025 ( 16.07.2025 ) 03  தமிழ்நாடு காவல் பயிற்சி தலைமையகத்தின் கீழ் நடத்தப்பட்டது. இப்பயிற்சியானது, 15 பணியிடை பயிற்சி மையங்கள் (ISTC) மூலம்

சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய காவல் ஆணையரகத்தை சேர்ந்த 93 பெண் காவலர் முதல் பெண் சிறப்பு உதவி ஆய்வாரள்கள் வரையிளானவர்களுக்கு காவல் பயிற்சி தலைமையகத்தில் செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட பணியிடை பயிற்சி மையத்திலும் மற்றும் தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், சேலம், கோயம்பத்தூர்

திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய 08 காவல் பயிற்சிப் பள்ளிகளில் 691 பெண் காவலர்களுக்கும் என மொத்தம் 784 பெண் காவலர்களுக்கு, இப்பயிற்சியானது அளிக்கப்பட்டது. இந்தப் பாடநெறி தமிழ் நாடு காவல்துறையை சேர்ந்த அனைத்து பெண் காவலர்களையும் உள்ளடக்கி தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள், அவர்களைக் கையாளும் முறைகள், புலனாய்வு நுட்பங்கள், வழக்கு ஆவணங்களை ஆவணப்படுத்துதல், POCSO மற்றும் சிறார் வழக்குகளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றிய தெளிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, விழிப்புணர்வு. மறுவாழ்வு மற்றும் அரசு உதவி குறித்த பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டது. மேலும் இப்பயிற்சியின் போது உடலையும், மனதையும் வலுப்படுத்தும் நோக்கில் யோகா பயிற்சிலும் அவர்கள் சிறப்பாக பங்கேற்று பயனனந்துள்ளனர்.

பயிற்சியின் இறுதி நாளன்று, பயிற்சி குறித்த விளக்க அமர்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவும் காவல் பயிற்சி தலைமையக காவல் துறை இயக்குநர் திரு.சந்தீப் ராய் ரத்தூர், இ.கா.ப அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மேலும், இவ்விழாவில் காவல் துறை இயக்குநர் பயிற்சி அவர்கள் காவல் பயிற்சி தலைமையகத்திற்கான சிற்றேடு (Brochure), வருடாந்திர பாட நாட்காட்டி (Course Calendar). பெண்கள் மற்றம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த பயிற்சி கையேடு மற்றும் காவல் பயிற்சி கையேடு (Police Training Manual) ஆகிய புத்தகங்களை வெளியிட்டு பயிற்சியாளர்களை ஊக்குவித்து சிறப்புரையாற்றினார்கள்.

இப்பயிற்சித் தொகுப்பில் உள்ள அனைவரும் கூட்டாக மதிப்புமிக்க நன்மைகளைப் பெற்றுள்ளனர் என்றும் மகிழ்ச்சியான மனப்பான்மையுடன் தங்கள் கடமைகளைச் செய்வதன் மூலம் தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்ப்பார்கள் என்றும் காவல் பயிற்சி தலைமையக காவல் துறை இயக்குநர் அவர்கள், இவ்விழாவில் வாழ்த்துரை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்கள்.

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *