திருச்சி மாவட்டம் மருதூரை சேர்ந்தவர் வேலுச்சாமி (70). இவர் நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்சி – நாமக்கல் சாலையில் தொட்டியம் சீனிவாசநல்லூர் அருகே வந்து கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வாய்க்காலில் விழுந்தது.

இதில் காரில் பொருத்தப்பட்டிருந்த ஏர்பேக் பலூன் திறந்ததால் அதிர்ஷ்டவசமாக வேலுச்சாமி காயமின்றி உயிர் தப்பினார். வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் வராததால் உயிர் இழப்பு ஏற்படாமல் வாய்க்காலில் கவிழ்ந்த கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. சம்பவம் குறித்து தொட்டியம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments