திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆலம்பாடி மேட்டு தெருவை சேர்ந்த கஸ்பார், அவருடைய மனைவி சௌந்தர்யா மகன் அருண் மற்றும் 4 வயது பேத்தி, வடுகர் பேட்டை ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி ஆகியோர் காரில் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு புது நன்மை விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது பூவாளூர் அருகே திருச்சி – சிதம்பரம் சாலையில் கார் வந்து கொண்டிருந்த போது காரை ஓட்டி வந்த அருண் உடல் சோர்வில் கண் அயர்ந்ததாக கூறப்படுகிறது. கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர வயலில் இறங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி தனியார் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           5
5                           
 
 
 
 
 
 
 
 

 26 May, 2024
 26 May, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments