கேர் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி) இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாம்
14 பிப்ரவரி 2026 காலை 9:00 மணிக்கு, நவலூர் குட்டப்பட்டு கிராமப் பஞ்சாயத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம் CARE பொறியியல் கல்லூரி (தன்னாட்சி) National Service Scheme ( என்.எஸ்.எஸ்) அமைப்பின் ஒருங்கிணைப்பில், மேக்ஸி விஷன் சிறப்பு கண் மருத்துவமனை, திருச்சி இணைந்து நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியை NSS தன்னார்வலர் ஈஸ்வரமூர்த்தி A வரவேற்புரையுடன் தொடங்கினார்.
இந்த முகாமில் கிராம மக்களுக்கு முழுமையான கண் பரிசோதனை மற்றும் மருத்துவ குழுவினர் கிராம மக்களை பரிசோதித்து தேவையான ஆலோசனைகள் வழங்கியதுடன் கண் பராமரிப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வு குறிப்புகளையும் வழங்கினர். கிராமப் பஞ்சாயத்து நிர்வாகிகள் அனைவரும் நிகழ்ச்சியை பாராட்டி, சமூக நலத்திற்காக பணியாற்றிய மருத்துவர்கள், என்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் மற்றும் நிர்வாகத்தினரை பாராட்டினர்.
என்.எஸ்.எஸ் தன்னார்வலர் தனுஷ் பிரியா R நன்றியுரையாற்றி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சுமார் 350 கிராம மக்கள் இந்த சுகாதார முகாமின் மூலம் பயனடைந்தனர். கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள், கல்லூரி நிர்வாகம் மற்றும் NSS தன்னார்வலர்கள் மேற்கொண்ட சமூகப்பணியை பாராட்டினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments