திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரியில் உள்ள கட்டிடங்கள் பராமரிப்பு வேலை நடைபெற்று வருகிறது. அதில் வெங்கடாஜலபதி காண்ட்ராக்டில் கார்பெண்டர் வேலை செய்து வந்தவர் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த இந்திஸ் வர்மன் மகன் ராஜேஷ் (21). இவர் கடந்த 28ஆம் தேதி இரவு என் ஐ டி கல்லூரி வளாகத்தில் உள்ள ஐஸ் பில்டிங்கில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு விஷப்பாம்பு ராஜேஷை கடித்துள்ளது. வலியால் துடித்த ராஜேஷை அருகில் இருந்தவர்கள் உடனடியாக காப்பாற்றி, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த ராஜேஷ் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
Comments