நாடாளுமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து உள்ள நிலையில், வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நட்சத்திர தொகுதியாக இருக்கக்கூடிய திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் கருப்பையா போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக அக்கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் அ.தி. மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது சாலையின் இருபுறங்களிலும் அ.தி.மு.க. கட்சி கொடிகளை கட்டி இருந்ததோடு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 20-க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தி இருந்ததாக

திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் பறக் கும்படை அதிகாரி தியாகேசன் கொடுத்த புகாரின்பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments